திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டுகளில் போட்டியிடக் கூடிய ஆளுங்கட்சி வேட்பாளர்கள் மற்றும் எதிர்க் கட்சி வேட்பாளர்கள் மேயர் பதவியை பிடிப்பதற்கு பலத்தை நிரூபிக்கும் விதமாக புதுப்புது உத்திகளை கையாண்டு வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் டீக் கடைகளில் டீ ஆற்றுவது, ஹோட்டல்களில் சப்பாத்தி சுடுவது, மார்க்கெட்டிற்கு சென்று காய்கறி விற்பது போன்ற பல்வேறு விஷயங்களை செய்து வாக்காளர்களை கவர்ந்து தங்களது வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
அதேசமயம், சுயேட்சையாக போட்டியிடும் 44வது வார்டு வேட்பாளர் மார்த்தாண்டன் மற்றும் 2வது வார்டில் போட்டியிட கூடிய சந்தோஷ் முத்து இருவரும் தங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தென்னை மரக்கன்றுகளை கையில் ஏந்தியவாறு ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டு வீடு வீடாக, வீதி வீதியாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
அதே போல் 17வது வார்டு களமிறங்கியுள்ள இளம் சுயேட்சை வேட்பாளரான வெங்கடேஷிற்கு குடிநீர் குழாய் சின்னம் ஒதுக்கி இருப்பதால் வாக்காள மக்களை சந்தித்து குடிநீர் குழாயை காட்டி வாக்கு சேகரித்து வருகிறார்.