Published on 06/06/2019 | Edited on 06/06/2019
மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த பாஜக செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்வில் தோல்வியடைந்தால் அதைத் தாங்கும் மனவலிமையை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். தமிழை கட்டாயமாக்கும் சூழல் ஏற்பட்ட நிலையில், தமிழே தெரியாத இளைஞர் சமுதாயம் உருவாகி வருகிறது. கல்விக்கொள்கையில் கூறியுள்ளதை புரிந்துகொள்ளாமல் எதிர்கட்சிகள் பிரச்சனை ஏற்படுத்த முயற்சி செய்கின்றன.
புதிய கல்விக் கொள்கையில் இந்தி விருப்பப் பாடமாக மட்டுமே கூறப்பட்டுள்ளது எனக் கூறியுள்ள அவர், பாரதியார் தலைப்பாகை காவி கலரில் இருப்பதாகக் கூறுபவர்கள் அவரது கோட் பச்சையாக இருப்பது பற்றி கேட்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.