Skip to main content

நான் உங்கள் சேவகனாக இல்லை என்றால் பதவியை ராஜினாமா செய்வேன்... மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

"மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போனால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன்" என்றே பிரச்சாரம் செய்கிறார் மயிலாடுதுறை மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்.

 

MNM

 

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ரிபாயுதீன். கும்பகோணம், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, திருமண்டங்குடி, கபிஸ்தலம், உள்பட பல்வேறு நகர்ப்புற கிராமப்புற பகுதிக்களில் விவசாயிகள், பெட்டிக்கடைக்காரர்கள், வணிகர்கள் உள்பட பலரிடமும் நேரில் சென்று வாக்கு சேகரித்தார்.
 

பிரச்சாரத்தின்போது வேட்பாளர் ரிபாயுதீன், "வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மாற்றம் வரவேண்டும் என மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர், எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற குழப்பம் மக்களிடம் ஏற்படவில்லை. அனைத்து வகையிலும் வெளிச்சத்தை தரும் டார்ச் லைட்டிற்கு வாக்களிக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்துள்ளனர். 
 

மக்கள் நீதி மய்யத்தின் கொள்கையான தரமான சாலை, குடிசை இல்லா வீடு, நல்ல கல்வி, சிறந்த அடிப்படை தேவையான வறுமை ஒழிப்பு, சிறந்த சுகாதாரம் என 100 சதவீதம் வருவதற்கு பாடுபடுவேன். 
 


தமிழகத்தில் 35 வருடங்களாக நற்பணி சேவையில் ஈடுபட்டுவரும் கமல்ஹாசன், ரூ. 16 கோடி செலவில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் கஜா புயலின்போது மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உதவினார். எனவே தமிழகத்தில் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளரான என்னை ஆதரித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். 
 

மயிலாடுதுறை தொகுதியில் கமல்ஹாசன் தெரிவித்தபோது 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும் என்று கூறினார். ஆனால், மக்களின் பெரு ஆதரவோடு ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என உறுதியளிக்கிறேன். வெற்றி பெற்றவுடன் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் சென்று வருகை பதிவேடு செய்வேன். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போனால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வேன்" என்று அவர் பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்