Skip to main content

“சர்க்கரை மட்டுமே கொடுத்து கொல்ல முடியாது” - ஆளுநர் தமிழிசை

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

I will listen to the chief's distress and resolve it - thamilisai

 

“சர்க்கரை கொடுத்துக் கொல்ல முடியாது. ஆனால், விஷம் கொடுத்துக் கொல்ல முடியும்” என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.

 

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் “டாக்டர் ஏபிஜே அப்துல்கலாமின் செயற்கைக்கோள் ஏவும் திட்டம் 2023” திட்டத்தை புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் துவக்கி வைத்தார். 

 

இதன்பின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “யார் என்ன விமர்சனம் வைத்தாலும் மக்களுக்கான கோப்புகளை நான் புறந்தள்ளுவது கிடையாது. நான் ஆளுநராக வருவதற்கு முன் பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. அதை எல்லாம் முடித்து வைத்துள்ளோம். எதிர்க்கட்சிகள் ஆளுநர் அடக்கி ஆளுகிறார். எதுவும் அரசாங்கத்தால் செய்ய முடியவில்லை எனச் சொல்லுகிறது. முதலமைச்சர் தனக்கு இருக்கும் சிரமத்தைச் சொல்லுகிறார். இதில் ஒன்றுமே இல்லை. 

 

அதிகாரிகளின் சில பிரச்சனைகளினால் சில கோப்புகள் காலதாமதம் ஆவதை முதல்வர் குறிப்பிட்டுள்ளார். அது எல்லாம் சரி செய்யப்படும். முதல்வர், நான் மற்றும் அதிகாரிகள் கூட்டம் போட்டு எங்கு திட்டங்கள் காலதாமதம் ஆகிறது என்பதைச் சரி செய்துவிடுவோம். 

 

யாரையும் மன உளைச்சலில் இருக்க வைக்கக்கூடாது என்பது எனது கொள்கை. முதல்வர் ஏன் மன உளைச்சலில் இருக்கிறார் என்பதை அவரிடம் நான் நேரடியாகக் கேட்டுத் தெரிந்து அதைத் தீர்த்து வைக்கிறேன்.  

 

முன்னாள் முதல்வர் நான் சர்க்கரை கொடுத்துக் கொல்கிறேன் எனச் சொல்லியுள்ளார். நான் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்குக் கூட சர்க்கரை கொடுத்துக் கொல்லமாட்டேன். ஏனென்றால் நான் டாக்டர். சர்க்கரை வேண்டும் என்றால் கூட கொடுக்கமாட்டேன். சர்க்கரை கொடுத்து யாராவது கொல்ல முடியுமா. விஷம் கொடுத்து வேண்டுமானால் கொல்ல முடியும். வார்த்தைகளிலேயே தப்பாக இருக்கிறது. சர்க்கரை கொடுத்துக் கொல்லுவேன் எனச் சொல்லுவதை விட சர்க்கரை கொடுத்துச் சொல்லுவேன் என எடுத்துக்கொள்ளலாம்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்