Skip to main content

“வார்த்தை இருக்கிறது என்பதற்காகப் பேசக்கூடாது” - ஈபிஎஸ்ஸை விமர்சித்த ஹெச்.ராஜா

Published on 01/09/2024 | Edited on 01/09/2024
H.Raja slams EPS

அ.தி.மு.கவுக்கு, பா.ஜ.கவுக்கும் இடையே அடிக்கடி வார்த்தை போர் நீடித்து வருகிறது. இதற்கிடையில், தமிழக பாஜக தலைவர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்துப் படிப்பதற்காக லண்டன் சென்றுள்ளார். லண்டனில் இருந்து தமிழக பா.ஜ.க தலைவர் வரும் வரை கட்சி பணிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக மூத்த பா.ஜ.க தலைவர் எச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஹெ.ச்.ராஜா இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், ஹெச்.ராஜா இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.கவை விமர்சனம் செய்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஹெச்.ராஜா, “அ.தி.மு.க எப்படி செயல்படுகிறது. நண்பர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கட்சிக்கு எம்.டியா அல்லது சேர்மேனா?. எதுவாக இருந்தாலும் யோசித்துப் பேச வேண்டும். வார்த்தைகள் இருக்கிறது என்பதற்காக பேசக்கூடாது. தொடர்ந்து, 32 ஆண்டுகளாக கட்சி பொறுப்பில் இருக்கிறேன். இப்போதும் கட்சி தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளேன். இன்றைக்கு கட்சியை வழிநடத்தும் குழுவுக்கு ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். 

பல அதிமுக அமைச்சர்கள், அரசியலுக்கு வருவதற்கு முன்பே, நான் கட்சியை தொடங்கி இருந்து கொண்டிருக்கிறேன். எடப்பாடி இப்போதும் நண்பர் இல்லை என்று சொல்லவில்லை. எல்லோரும் நண்பர்கள் தான். எங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அனைத்து கட்சி நிர்வாகிகளும் வருவார்கள். எல்லோர் மீது மரியாதை வைத்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்