Published on 15/09/2022 | Edited on 15/09/2022

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், மறைந்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான இன்று பல அரசியல் தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்ட அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அதிமுக எம்பி தங்கதுரை செய்தியாளர்களைச் சந்தித்தார்
அப்பொழுது அவர் பேசுகையில், ''அதிமுக ஆட்சியில் இருந்தபோது அமைச்சர் செந்தில்பாலாஜி மீது தற்போதைய தமிழக முதல்வர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொழுது கடுமையாக விமர்சனங்களை வைத்திருந்தார். அதேபோல் அதிமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வை கொண்டுவந்த பொழுது அதற்கான விளக்கத்தை ஏற்காத திமுக, தற்பொழுது மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு அதே காரணத்தைக் கூறி வருகிறது. இது எப்படி ஏற்கத்தக்கது'' என்ற கேள்வி எழுப்பினார்.