அமைச்சர் பதவி பறிக்கபட்டும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு கெஸ்ட் ஹவுஸை இன்று வரையிலும் பயன்படுத்தி வரும் முன்னாள் அமைச்சர்.
தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு பதிலாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தொழில்நுட்பத் துறையை கூடுதல் பொறுப்பாக ஏற்றுக்கொள்வார் என அறிவிக்கப்பட்டது.

அதற்கு முக்கிய காரணமாக பேசப்பட்டது அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர் உடுமலை ராதா கிருஷ்ணனுக்கும், மணிகண்டனுக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாகவே மணிகண்டன் பதவி பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அரசு பதவியில் இருந்து விலகியும் அரசு சலுகை பெறுவது அரசு விதி மீறலாகும். அமைச்சர் பதவி நீக்கப்பட நாளில் இருந்து இன்று வரையிலும் 6 மாதங்களாக அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிரின்வேஸ் சாலையிலுள்ள அரசு கெஸ்ட் ஹவுஸ் காலி செய்யாமல் தங்கி வருகிறார் மணிகண்டன். இதனை நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிமுக அரசு கண்டும் காணாமலும் உள்ளது.
அதே போல 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்தபோது எம்.எல்.ஏக்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு கெஸ்ட் ஹவுஸ் எந்த முன் அறிவிப்புயின்றி பூட்டு போட்ட அரசுக்கு, தற்போது வரையிலும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டும் உள்ள முன்னாள் அமைச்சர் மட்டும் அரசு கெஸ்ட் ஹவுஸ் பயன்படுத்தி வருவது அரசுக்கு தெரியாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.