Published on 13/01/2023 | Edited on 13/01/2023

முன்னாள் மத்திய அமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் நேற்றிரவு மறைந்தார். 75 வயதான சரத் யாதவின் உடல்நிலை வயது முதிர்வின் காரணமாக மோசமடைந்தது. இதனையடுத்து ஹரியானா மாநிலத்தில் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு சரத் யாதவ் மறைந்துள்ளார். இச்செய்தியை சரத் யாதவின் மகள் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது மறைவுக்குப் பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கைலைத் தெரிவித்து வருகின்றனர்.
சரத் யாதவ் முன்னாள் பிரதமர் வாஜ்பாயி அமைச்சரவையில் 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.