தமிழக தலைநகரில் உள்ள கோட்டையிலும் பரபரப்பாக சில விஷயங்கள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இது பற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, தனக்கு கிடைத்த முதல்வர் பதவியை இறுக்கமாக பிடித்துக்கொண்டு இத்தனை காலம் சிக்கல் இல்லாமல் சமாளித்த எடப்பாடியை அரசியல் ராஜதந்திரியாக இமேஜ் டெவலப் செய்கிற வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது என்கின்றனர். ஆனால், அவரோட அமைச்சரவையில் இருக்கிறவங்களே இடபடிக்கு சிக்கலை ஏற்படுத்துகிறார்கள் என்ற பயமும் எடப்பாடிக்கு இருக்கிறது.
பா.ஜ.க.வைப் பற்றி மந்திரி பாஸ்கரன் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். பா.ஜ.க. ஆதரவாளரான ராஜேந்திரபாலாஜியோ தி.மு.க.வையும் தி.க.வையும் அடித்து விரட்டுங்கள் என்று ரஜினி ரசிகர்களை தூண்டிவிடும் விதமாக பேசியிருந்தார். மந்திரி கருப்பணனோ, ஊராட்சியில் தி.மு.க. வெற்றி பெற்ற இடங்களுக்கு உள்ளாட்சி நிதியை ஒதுக்க மாட்டோம் என்று ஓப்பனாக கூறியிருந்தார். இது எல்லாமே கடும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தார். கடந்த திங்கட்கிழமையன்று அமைச்சர்களைக் கூப்பிட்டு கறாராக கூறியிருந்தார் எடப்பாடி.
சீனியர் அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராசன் இவர்களிடம் எல்லாம் தனித்தனியாக ஆலோசனை நடத்திய எடப்பாடி, மற்ற அமைச்சர்களை ஒன்றாக வைத்து ஆலோசித்து பேசியிருந்தார். அவர்களிடம் மாவட்டத்தில் கோஷ்டி அரசியல் நடந்தால் வெற்றி பெற முடியாது. கட்சியின் மாவட்ட நிர்வாகிகளோடு அட்ஜஸ்ட் பண்ணி நடந்து கொள்ளுங்கள் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. அது உங்க எதிர்காலத்துக்கும் நல்லதாக இருக்கும் என்றும் சொன்னதாக கூறுகின்றனர். நடப்பது அ.தி.மு.க. ஆட்சி என்று அவர்களிடம் கறாராக கூறியுள்ளார் எடப்பாடி.
ஆனால் அமைச்சர்களெல்லாம் தங்கள் மாவட்டத்தோட கட்சி நிர்வாகம் என்ன நிலைமையில் இருக்கு என்று ஒரு ஃபைல் எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்கள். அது பற்றி எதுவும் பேச அனுமதிக்கவில்லை என்ற வருத்தமும் கோபமும் அமைச்சர்களிடம் இருப்பதாக சொல்கின்றனர். லோக்கலில் தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்தினால்தான் அரசியல் பண்ணமுடியும் என்று அமைச்சர்கள் சுயநலத்தோடு தான் காய் நகர்த்துகிறார்கள். இது எடப்பாடிக்கும் தெரியும். பொது நிகழ்வுகளில் அமைச்சர்கள் எகிறுவதால், அவர்களிடம் கறார் குரலில் எடப்பாடி பேசினாலும், டெல்லியை சரிக்கட்டி சமாளிப்பது பெரிய வேலையாக உள்ளதாக கூறுகின்றனர். இதில் இவங்க இப்படி பண்ணுறாங்களேன்னு எடப்பாடி கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.