எடப்பாடிக்கு தற்போது கட்சியில் அதிக போட்டியாக இருப்பது அமைச்சர் விஜயபாஸ்கர் தான் என்று கூறுகின்றனர். ஏற்கனவே சில அமைச்சர்கள் எடப்பாடியிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றி எச்சரித்து உள்ளதாக சொல்கின்றனர். 40 எம்.எல்.ஏ.க்களை, மாதாந்திர சம்பளம் கொடுத்து கையில் வைத்திருக்கும் விஜயபாஸ்கர், எதிர்க் கட்சி எம்.எல்.ஏ.க்களிடமும் உறுதியான நட்பையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார் என்று அலெர்ட் செய்துள்ளார்கள். அதனால் அண்மைக்காலமாவே எடப்பாடியின் சந்தேக வளையம் அமைச்சர் விஜயபாஸ்கரைச் சுற்றி விழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் தற்போதைக்கு தட்டிக் கேட்கவும் ஆரம்பிதுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக நடுகாட்டுப் பட்டி சிறுவன் சுஜித் விவகாரத்தில் கூட விஜய பாஸ்கர் நடந்துக்கிட்ட முறைகளைப் பார்த்து அவரிடமே தன் அதிருப்தியைத் தெரிவித்து உள்ளார் எடப்பாடி. பத்து நிமிசத்துக்கு ஒரு முறை முதல்வர் விவரம் கேட்குறாருன்னு மந்திரி சொன்னது இதைத்தானா என்றும் கூறிவருகின்றனர். மேலும் சுஜித்துக்கு அஞ்சலி செலுத்துறதுக்காக அந்தப் பையன் வீட்டுக்கு எடப்பாடி வந்த போது, அவ்வளவு நேரம் மீடியா முன்னே நின்ற விஜயபாஸ்கர் சற்று பம்மி, பின்னே சென்றதையும் அதன் பின்னணியும் நம்ம நக்கீரன் மட்டும்தான் சொல்லியிருந்தது. சுஜித்தை காப்பாற்ற பேரிடர் மீட்புக் குழு மட்டும் ஸ்பாட்டில் இருந்தால் போதும் என்கிறது தான் எடப்பாடியின் திட்டமாக இருந்துள்ளது.
ஆனால் அந்த மாவட்டத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத, அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கே சென்று சீன் போட்டதும், சிறுவன் உடல்நிலை குறித்து தவறாக கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி கடைசியாக கவிழ்த்ததும் எடப்பாடியை டென்ஷனாக்கியுள்ளது. அதனால் தான், உங்க துறையில் நடக்கும் அரசு மருத்துவர்கள் போராட்டத்தைக் கூட கவனிக்காமல், அங்கே சென்று எதை சாதிச்சீங்கன்னு கோபமாக கேட்டிருக்கார் என்று கூறுகின்றனர்.