Published on 11/04/2019 | Edited on 11/04/2019
நாமக்கலிலுள்ள திருச்செங்கோட்டில் அதிமுக வேட்பாளர் காளியப்பனுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர், தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் என்னை விமர்சிக்கலாம், ஆனால் விவசாயிகளை விமர்சிக்கக்கூடாது. முதல்வர் என்ற மரியாதை இல்லாமல் என்னை தரக்குறைவாக பேசுகிறார், நாங்கள் பதிலுக்கு பேச ஆரம்பித்தால் ஸ்டாலினின் காதிலுள்ள செவிப்பறை கிழிந்துவிடும் என்று கூறினார்.