Published on 18/04/2019 | Edited on 18/04/2019
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள சிலுவம்பாளையம் பகுதியில் தனது வாக்கை செலுத்தினார். வாக்களித்த பின்னர் அங்கு கூடியிருந்த செய்தியாளர்களை சந்திக்காமல் முதல்வர் தனது வாகனத்தில் ஏறி சென்றார். மேலும் ஓ.பி.எஸ் பெரியகுளம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது அங்கு வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அவர் வாக்களிப்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறார்.