வரும் சட்டமன்ற தேர்தலை பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தி.மு.க. சந்திக்கும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இதுபற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், வருகிற 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை இந்தியன் பி.ஏ.சி. (இந்தியன் பொலிட்டிகல் ஆக்சன் கமிட்டி) அமைப்புடன் இணைந்து தி.மு.க. சந்திக்க உள்ளது என கூறியிருந்தார்.
இந்த நிலையில், தி.மு.கவிற்கு ஆலோசனைகளைக் கூற நியமிக்கப்பட்டிருக்கும் பிரசாந்த் கிஷோர் டீம், பெரும்பான்மையாக உள்ள இந்து ஓட்டுகளையும், பெண்கள் வாக்குகளையும் கவர வேண்டும் என்பதால் இந்து மதத்தை புண்படுத்தக்கூடாது என்றும் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. கட்சி சீனியர்களோ இது பா.ஜ.க. குரல் போல இருக்கு என்று டென்ஷனில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் இது பற்றி எல்லாத்தையும் விரிவாக பேசுவதற்காக வருகிற 17-ந்தேதி மா.செ. கூட்டத்தை தி.மு.க. தலைமை கூட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கட்சியின் இளைஞரணித் தலைவர் உதயநிதியை தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்துவதற்காக பிரசாந்த் கிஷோர் திட்டம் வகுத்துக் கொடுப்பார் என்று கூறப்படுகிறது.