Skip to main content

ஊரை ஏமாற்றி பேட்டி... இதோ உங்க முதலாளி சொல்லிட்டார்... அதிமுக, பாமகவை பற்றி விமர்சித்த திமுக எம்.பி!

Published on 11/03/2020 | Edited on 11/03/2020

இன்று  நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டிற்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என எதிர்க்கட்சியான திமுக கோரிக்கை வைத்தது. என்.பி.ஆர் தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு பதிலளித்து விட்டதா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும்  தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டிற்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர வேண்டும். போராடி வரும் மக்களுக்கு ஒரு வாக்குறுதியை அரசு வழங்க வேண்டும் எனவும் ஸ்டாலின் பேசினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் உதயகுமார், என்பிஆர் தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதத்திற்கு இன்னும் மத்திய அரசு பதிலளிக்கவில்லை எனக் கூறினார். 
 

dmk

 


இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அதில், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை தான் வேண்டும் என்று #ஊரை_ஏமாற்றி பேட்டி அளித்து ஆனால் பாராளுமன்றத்தில் இதை பற்றி பேசாமல் CABக்கு ஆதரவாக வாக்களித்த @draramadoss மற்றும் அதிமுக உறுப்பினர்களே இதோ உங்க முதலாளி Article 9 படி இரட்டைக் குடியுரிமை சாத்தியம் இல்லை என்று கூறிவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். 


 

 

சார்ந்த செய்திகள்