Published on 21/06/2019 | Edited on 21/06/2019
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அவரிடம் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு எந்த அளவில் உள்ளது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. அதைத் தாண்டி பொது இடங்களில் பாதுகாப்பு என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது" என்று கூறினார். அதன்பின்னர் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு, " தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. மழைநீரை சேமிக்கவும் வறட்சியைப் போக்குவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. காரணம் தமிழக அரசுக்கு நிதி பற்றாக்குறை உள்ளது. சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு வரும்போதுதான் தமிழகத்தின் நிலை குறித்து அனைவரும் பேசுகிறோம்" என்று கூறினார்.
இதனையடுத்து நீங்கள் எப்போது தேர்தலை சந்தித்து பதவிக்கு வரப்போகிறீர்கள் என்று சௌமியாவிடம் கேட்கப்பட்டது, அந்த கேள்விக்கு இப்போதைக்கு இது தேவை இல்லை. ஏற்கனவே தகுதியான வேட்பாளர்களையே பொதுமக்கள் வெற்றி பெற வைக்கவில்லை என்ற வருத்தம் உள்ளது" என்றார். அதிமுக பாமக கூட்டணி இப்போது எப்படி இருக்கிறது என்று கேள்விக்கு, அரசியல் குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை" என்று தெரிவித்தார். மேலும் காதலுக்கு பாமக எதிரியா என்ற கேள்விக்கு பதிலளித்தவர், 16 வயதில் வருவது காதல் அல்ல. உடலாலும் மனதாலும் தகுதியான பின்னர் வரும் காதல், 5 ஆண்டுகளாவது நிலைத்து நிற்க வேண்டும். அதுவே உண்மையான காதல் என்று கூறினார்.