ஸ்டாலின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி. வேட்பாளர்கள் தேர்வு பற்றி விசாரித்த போது, மாநிலங்களவையில் சீனியரும், அழுத்தமாக வாதங்களை எடுத்து வைக்கக்கூடிய ஆற்றல் கொண்டவருமான திருச்சி சிவாவிற்கு மறுபடியும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார் ஸ்டாலின். அதேபோல், 2011ல் ஜெ. ஆட்சிக் காலத்தில் தி.மு.க. மாஜி மந்திரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மீது போடப்பட்ட நில அபகரிப்பு சட்டம் தொடர்பான வழக்குகளிலும், குண்டாஸ் வழக்குகளிலும் ஆஜராகி வாதாடி, பல வழக்குகளில் வெற்றி பெற்ற சீனியர் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன். அவருக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதில் மூன்றாவது சீட்டுதான் மிகவும் எதிர்பார்ப்போடு இருந்தது.
அதை அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜுக்கு கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். 1996-ல் கலைஞர் அமைச்சரவையில் மந்திரியாக இருந்தவர் செல்வராஜ். அப்போது தன் சமூகத்தினருக்கு பெரிதாக எதுவும் இவர் செய்யவில்லை அதிருப்தி அவங்களிடம் இருந்தாலும், கலைஞர் ஆட்சியில்தான் அருந்ததியருக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதுபோல், இப்போதும் அவங்களுக்கான பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்று ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார் என்கின்றனர். அதோடு, அ.தி.மு.க. சைடில் கடந்த ஆண்டு தேர்வுசெய்த மூவரில் இதே சமூகத்தைச் சேர்ந்த மேட்டூர் நகர அ.தி.மு.க. செயலாளர் சந்திரசேகரும் இருந்தார். அதனால், தி.மு.க.வும் இந்த கோட்டாவை ஈடுகட்டியிருப்பதாக கூறுகின்றனர்.