சென்னையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் லியோனி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், ஜெயலலிதா புகைப்படம் சட்டமன்றத்தில் வைக்கக்கூடாது. ஜெயலிதாவுக்கு மணிமண்டம் கட்டினால் கோர்ட்டுக்கு சென்று அதனை அற்புறப்படுத்துவோம் என்று சொன்னவர் யார் தெரியுமா? பாமக தலைவர்கள் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ். அவர்கள் விருந்து வைக்கிறார்கள் என்ற உடனே தைலாபுரத்திற்கு செல்கிறார்கள் பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும்.
நரேந்திர மோடி பேச்சு எப்படி இருக்கும் என்று தெரியுமா? வாயில் இருந்து தேன் ஊருகிற மாதிரி இருக்கும். ஆனால் ஊறாது. ரவையே இல்லாமல் வாயில உப்புமா கிண்டுற ஆளு யாருன்னு கேட்டா அவருதான். எப்படித்தான் அந்த கலையை அவர் கத்துக்கிட்டாருன்னு தெரியல. இன்றைக்கு (நேற்று) சென்னையில நடக்கிற மாநாட்டில் அப்படித்தான் விவசாயிகளுக்கு நிறைய செய்திருக்கிறோம் என்று சொல்லிவிட்டு போயிருக்கிறார்.
அந்தக் கூட்டத்தில் ராமதாஸ் பேசுகிறார். நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கையை மோடி முன்பு வைக்கிறார். அதற்கு பதில் சொல்லியிருக்க வேண்டுமல்லவா நரேந்திர மோடி. ராமதாஸ் பேசுவதை கேட்டுவிட்டு பின்னர் பேசிய மோடி, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்கிறார். அதையா நாங்க கேட்டோம். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டாரா பதில் சொன்னாரா? ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டார்களே அதற்கு பதில் சொன்னாரா? மேகதாது அணை விவகாரத்திற்கு பதில் சொன்னாரா?
மோடி வந்து சென்ற பிறகு துரைமுருகனை தொடர்புகொண்ட தேமுதிக சுதீஷ், திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்புகிறோம் என்கிறார். சீட் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை என்று சொன்ன பிறகும், எப்படியாவது கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இந்த முடிவை எடுக்க வேண்டியது எங்கள் தலைவர்தான் என்று கூறிவிட்டார் துரைமுருகன். திமுக தெளிவாக உள்ளது.
திருமண வீட்டில் விருந்து ஒழுங்கா வைக்கலன்னா நாற்காலி, டேபிளெல்லாம் பறக்குமே அந்த மாதிரி, மோடி பங்கேற்கும் கூட்டத்தில் விஜயகாந்த் படத்தை காலையில் பத்தரை மணிக்கு வைக்கிறான், பதினொன்ரை மணிக்கு எடுக்குறான், திருப்பி மூன்ரைக்கு வைக்கிறான், நால்ரைக்கு எடுக்குறான். இப்படியே எடுத்தெடுத்து திரும்ப வைச்சி, பின்னர் ஆறரை மணிக்கு வைத்து, மோடி சென்ற பிறகு எடுக்கிறார்கள். அதன்பிறகு தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பியூஸ்கோயல், இபிஎஸ், ஓபிஎஸ் ஆலோசனை. மோடி சொல்கிறார் தேசிய ஜனநாயக கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி. போட்டோ வைக்க, எடுக்க, வைக்க எடுக்க இதற்கு பெயர்தான் கூட்டணியா?
யாருமே கூட்டணிக்கு வரவில்லை என்றவுடன், பாமக வந்தவுடன் உடனே 7 தொகுதிகளை கொடுத்துவிட்டு, இப்போது தேமுதிகவுக்கு கொடுக்க தொகுதிகள் இல்லாமல் முழிக்கிறது அதிமுக. இவ்வாறு பேசினார்.