வழக்கம் போல் தனக்கு வெயிட்டான அதிகாரம் வேணும்ன்னு கேட்டாரா? அரசியல்வாதியோட கோரிக்கை வேற என்னவா இருக்கும்? என்ற பல கேள்விகள் சமீப காலமாக ஓ.பி.எஸ்.எஸ்ஸை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. நிதித்துறையும் நகர்ப்புறம், மற்றும் வீட்டு வசதித்துறையும் தன்னிடம் இருந்தபோதும், துணை முதல்வர் என்பதற்கான எந்தவித சிறப்பு பவரும் அதிகாரமும் இல்லைங்கிற தன் ஆதங்கத்தை அவர்களிடம் வெளிப்படுத்தினாராம் ஓ.பி.எஸ். அதேபோல் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி மத்தியில் அமைந்தால் தன் மகனுக்கு பா.ஜ.க. அமைக்கும் கேபினட்டில் பவர் ஃபுல்லான ஒரு மந்திரி பதவி தேவைன்னும் , ஒருவேளை தேனியில் முடிவு எதிர்பார்த்த மாதிரி வராமல் போனால், தன் மகனுக்கு ராஜ்யசபா பதவி கொடுத்து மந்திரியாக்கணும்னும் கேட்டுக்கொண்டாராம்.
இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எடப்பாடி ஆட்சிக்கு சிக்கல் வந்தால், தன்னால துணை முதல்வரா நீடிக்க முடியாதபட்சத்தில், தன்னை ஏதாவது ஒரு மாநிலத்துக்கு கவர்னராக ஆக்கணும்னு அழுத்தமா சொல்லியிருக்காரு. ஓ.பி.எஸ். மேலே பா.ஜ.க. லீடர்களுக்கு எப்போதுமே நம்பிக்கை உண்டு. அதனால அவர் போட்ட டீலை பா.ஜ.க. தலைவர்கள் மறுக்கவில்லை என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அந்த சந்திப்பின் போது பா.ஜ.க. சீனியர் ஒருவர், அவர் நம்ம பா.ஜ.க.விலேயே சேர்ந்துடலாம்ன்னு கலகலப்பா சொல்ல, இதிலிருந்துதான் ஓ.பி.எஸ். பா.ஜ.க.வில் சேரப் போறார்ங்கிற வதந்தி அணுகுண்டா வெடிச்சி நாலா பக்கமும் பரவ ஆரம்பிச்சிது. இது பற்றி நிருபர்கள் ஓ.பி.எஸ்.சிடமே நேரடியாகக் கேட்க, அதுக்குப் பிறகுதான் அவர் அழுத்தமா மறுப்பு சொல்ல வேண்டிய நிலை உருவானது.இப்படி பரபரப்பாக அரசியல் சென்று கொண்டிருப்பதால் மே 23க்கு பிறகு தமிழக்தில் நிறைய மாற்றங்கள் வரும் என்று மக்களும்,அரசியல் விமர்சகர்களும் கருதுகின்றனர்.