மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துத் தொடர்பான வழக்கின் தீர்ப்பில் தீபா மற்றும் தீபக் ஆகியோரை, ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் எனக் குறிப்பிடப்பட்டதை, 'நேரடி வாரிசு' என நீதிபதிகள் திருத்தம் செய்து அறிவித்தனர். அதோடு, வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதால், அங்கு தீபா மற்றும் தீபக் ஆகியோர் செல்ல வேண்டாம் எனவும் இருவருக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் ஜெ’வின் போயஸ்கார்டன் வீட்டுக்கு நேர் எதிரில், ஸீபிராஸ் நிறுவனத்தின் மூலம் சசிகலா மிகப்பெரிய அளவில் பங்களா கட்டிவருகிறார். இது ஜெ'வின் அண்ணன் மகள் தீபாவை ஏகத்துக்கு எரிச்சலாக்கி இருப்பதாகச் சொல்கின்றனர். ஜெ'வின் நினைவில்லத்துக்கு வருபவர்களைத் தன் பக்கம் ஈர்க்கும் நோக்கத்தோடுதான் சசிகலா இங்கே பங்களா கட்டுகிறார். இதற்கு எடப்பாடி அரசு எப்படி அனுமதி கொடுத்தது? சசிகலாவுக்கு இப்பவே தன் தொண்டூழியத்தை எடப்பாடி ஆரம்பிச்சிட்டாரான்னு தீபா புலம்பிக்கிட்டு இருப்பதாகக் கூறிவருகின்றனர்.