Skip to main content

பாஜகவை தமிழகம் புறக்கணித்ததால் நெருக்கடியை சந்திக்கப் போகிறதா?

Published on 31/05/2019 | Edited on 31/05/2019

தி.மு.க. கூட்டணி சார்பில் தமிழகத்திலிருந்து 37 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வேஸ்ட் என்றும், நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் ஆதரித்த பா.ஜ.க.வைப் புறக்கணித்ததன் மூலம், தமிழகம் மிகப்பெரும் நெருக்கடியை சந்திக்கப் போகிறது என்றும் பய உணர்ச்சி உண்டாக்கப்படுகிறது. வாக்களித்த மக்களை அச்சுறுத்தும் இந்த வாதங்கள் சரியானவைதானா? மத்திய அரசுக்கு அதிக வரிவருவாய் கொடுக்கும் மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு முன்வரிசையில் இடம் உண்டு. தனிநபர் வருமானத் திலும், மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்று வதிலும், ஒருங்கிணைந்த வளர்ச்சியிலும் தமிழகம் முன்னணியில் இருப்பதால் ஒருபோதும் தமிழ்நாட்டை மத்திய பா.ஜ.க. அரசால் புறக்கணிக்க முடியாது'' என்கிறார் பொருளாதார வல்லுநர் சுகுமாரன்.

 

bjp



ஒற்றை எம்.பியாக ராஜ்யசபாவில் அறிஞர் அண்ணா எடுத்து வைத்த கருத்துகள் இந்திய பிரதமர் நேரு உள்பட எல்லோரையும் திரும்பிப் பார்க்கவும் திடுக்கிடவும் வைத்தது. அண்ணாவின் கொள்கைகள்தான் இன்றைய இந்தியாவை ஒற்றுமையாக வழிநடத்துகின்றன'' என்கிற தன்னாட்சித் தமிழகம் அமைப்பின் ஆழி.செந்தில்நாதன், இந்தி பேசாத மாநில மக்களுக்கான பாதுகாப்பு உறுதிமொழியை நேருவிடமிருந்து கடிதம் மூலம் பெற்ற ஈ.வெ.கி. சம்பத், எமர்ஜென்சி காலத்தில் முழங்கிய இரா.செழியன், தனிநபர் மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றிய திருச்சி சிவா, தமிழர் உரிமை பற்றி பேசிய வைகோ என ஒற்றை நபர்களாக சாதித்த தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வரலாற்றில் உண்டு. 

எம்.பி. என்ற முறையில் தமிழகத்திலிருந்து சென்றிருப்பவர்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அனைத்து அதிகாரங்களும் உண்டு. கஹஜ் ம்ஹந்ங்ழ் என்றுதான் எம்.பி.க்களை சொல்கிறோம். அவர்களின் முன்மொழிவு ஏற்கப்பட்டால் அதனை நிறைவேற்றும் பொறுப்பு கேபினட் தலைமையிலான நிர்வாகத்துறைக்கு இருக்கிறது'' என்கிறார். இதனை மறைத்துவிட்டு, எதிர்க்கட்சிக் கூட்டணியின் வெற்றியை ஏளனம் செய்வது, ஜனநாயக விரோதம்' என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆனால், பா.ஜ.க. இதையே பிரச்சாரமாக்கி, அடுத்த முறை தமிழ்நாட்டில் கால் பதிக்க இப்போதே தயாராகிவிட்டது. 

சார்ந்த செய்திகள்