காங்கிரஸ் கட்சி இந்துமதத்தைக் காப்பியடித்துக் கொண்டிருப்பதாக நிர்மலா சீத்தாராமன் குற்றம்சாட்டியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் 84ஆவது மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, பா.ஜ.க., மோடி குறித்து கடுமையாக விமர்சித்தார். அவரது உரையில், ‘பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் வலிமையான, மூர்க்கமான கவுரவர்களைப் போன்றவர்கள். அதேசமயம், காங்கிரஸ் கட்சி உண்மைக்கான சண்டையிடும் பாண்டவர்களைப் போன்றது’ எனக் கூறியிருந்தார்.
Congress Party wants to identify itself with the Pandavas, The same party which questioned the fundamental existence of Lord Ram. It is the party which chooses to mock Hindus and Hindu rituals : BJP leader Nirmala Sitharaman on Rahul Gandhi's speech at #CongressPlenarySession pic.twitter.com/4fGszVj9h0
— ANI (@ANI) March 18, 2018
இதற்கு பதிலடி தரும் விதமாக பேசியுள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ‘ராமர் இருந்தார் என்பதை மறுக்கும் ஒரு காங்கிரஸ் கட்சி தங்களைப் பாண்டவர்கள் என்று கூறிக்கொள்கிறது. காங்கிரஸ் கட்சி இந்துக்களையும், இந்து சடங்குகளையும் காப்பியடித்துக் கொண்டு செயல்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.