அமைச்சரவைக் கூட்டத்தில், ஒழுங்காக இருங்கள். இல்லையென்றால் துறையை மாற்றிவிடுவேன் என முதல்வர் கூறியதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்
கலைஞரின் 100வது பிறந்தநாளைத் தமிழக அரசு இந்த வருடம் முழுவதும் கொண்டாடத் திட்டமிட்டு வெகு விமர்சையாக கொண்டாடியும் வருகிறது, அந்த வகையில் நேற்று சென்னை மாநில கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி, “234 தொகுதியிலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த வேண்டும் என்பது தான் முதல்வர் ஸ்டாலினின் விருப்பம். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் வேலையில்லாத இளைஞர்கள் இல்லை என்ற நிலையை முதல்வர் கூறியதை போல் உருவாக்க வேண்டும். இன்று வேலை வாய்ப்பினை பெற்றுள்ள நீங்கள், நாளை100 பேருக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு வர வேண்டும்” எனறார்.
மேலும், இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும். இல்லையென்றால் துறையை மாற்றிவிடுவேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்” என்றார்.