Skip to main content

“தி.மு.க கூட்டணியில் பிளவை எப்போதும், எவராலும் ஏற்படுத்த முடியாது” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 28/09/2024 | Edited on 28/09/2024
Cm MK stalin speech at DMK coral festival

தி.மு.க தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, காஞ்சிபுரத்தில் தி.மு.கவின் பவள விழா பொதுக்கூட்டம் இன்று (28-09-24) நடைபெற்றது. திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களான, வைகோ, கி.வீரமணி, தொல்.திருமாவளவன், செல்வப்பெருந்தகை, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்டவர்கள் பங்கேற்று பேசினர்.

அந்த வகையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “அறிஞர் அண்ணா உருவாக்கிய திமுக இயக்கத்தின் பவள விழாவை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். திமுகவின் பவள விழாவை நாம் நடத்துவது நமக்கு கிடைத்த பெருமை. வான் மழை வாழ்த்தில் உருவான திமுக தற்போது வையகம், பாராட்டும் அளவிற்கு வளர்ந்துள்ளது. அறிஞர் அண்ணாவின் பாதையில் இம்மியளவும் விலகாமல் திராவிட மாடல் அரசை நடத்துகிறோம். அண்ணா வழியில், தமிழ்நாட்டை கலைஞர் வளர்த்தார். திமுகவிற்கு கிடைத்துள்ள புகழ் மாலையில் அனைவருக்கும் பங்கு உள்ளது. 

தி.மு.க என்ற மூன்றெழுத்தில் உயிர் அடங்கியுள்ளது. திமுகவின் கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணி; கொள்கை கூட்டணி. சில கூட்டணி, தேர்தல் சமயத்தில் மட்டுமே இருக்கும். தேர்தல் முடிந்தால், கூட்டணி முடிந்துபோய் விடுகிறது. தமிழகத்தில் நாம் அமைத்த கூட்டணியை பார்த்துதான், இந்தியா கூட்டணி கூட உருவானது. திமுக கூட்டணியில் மோதல் வராதா? பகையை வளர்க்க முடியாதா? என்று நினைக்கின்றனர். திமுக கூட்டணியில் பிளவை எப்போதும், எவராலும் ஏற்படுத்த முடியாது. பாசிசத்தை வீழ்த்தவே ஒன்றிணைந்து உள்ளோம். திமுக கூட்டணியில் மோதல் வராது. திமுக கூட்டணியில் விரிசல், ஏற்படுத்த அவதூறு பரப்பி சிலர் விஷம வேலைகளை செய்தனர். 

திமுகவின் அடிப்படை கொள்கைகள் சமுதாயத்தின் சீர்திருத்தமாக இருக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியம் இல்லாதது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலைக் கூட 7 கட்டங்களாக நடத்தி முடித்தனர். நாடாளுமன்றத் தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடியாத இவர்கள், ஒரே நாடு ஒரே தேர்தலை எப்படி நடத்துவார்கள்?. இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமில்லை. ஆனால், மத்திய அரசு ஒரே பாட்டையே பாடிக் கொண்டிருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டுவந்து மாநில அதிகாரத்தை குறைக்கவே முயற்சி செய்கின்றனர். இந்த திட்டம், மாநிலங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்” என்று பேசினார். 

சார்ந்த செய்திகள்