காஞ்சிபுரத்துக்காரரான ரூபி மனோகரனுக்கு இடைத்தேர்தல் நடக்கும் நாங்குநேரியில் சீட் கொடுத்ததில் தென்மாவட்ட காங்கிரஸ் தரப்பு அப்செட்டிலேயே இருக்கிறது. மேலும், கட்சியின் பெரிய தலைகளை ’வெயிட்டா’ கவனித்து, ரூபி மனோகரன் சீட் வாங்கிட்டார் என்று புகார்க் கடிதங்களை ராகுல்காந்திக்கு அனுப்பிக்கிட்டே இருக்கிறது.
ஆனால் ரூபி மனோகரனோ, பிரச்சாரத்துக்கு ராகுல்காந்தி வந்தால் நிலைமை சரியாகிவிடும் என்று அவரை அழைக்க பெரிய பட்ஜெட்டே போட்டிருக்காராம். சொந்தக் கட்சிக்கரங்களே சும்மா இருக்கும்போது, நாம எதுக்கு வெட்டியா வேலை பார்க்கணும் என்கிற மனநிலையில் தி.மு.க. உடன்பிறப்புகளும் ஒதுங்கி நிக்கிறாங்களாம்.
இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பு, நாங்குநேரி நிலவரம் பற்றி தி.மு.க. தரப்பு எடுத்த சர்வேயில், தி.மு.க.வுக்கு அமோக ஆதரவு இருப்பதாக தெரிந்துள்ளது. காங்கிரஸுக்கு தொகுதி ஒதுக்கப்பட்ட பிறகு எடுத்த சர்வேயின் முடிவு, ரொம்ப வீக்கா இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதில் அதிர்ச்சியான அறிவாலயம், நாம நின்னிருந்தா ஜெயிச்சிருக்கலாமேன்னு ஆதங்கப்படுதாம். அதனால் விக்கிரவாண்டியில் முழு பலத்தையும் காட்டியாகணும் என்று வேலை செய்கிறது. அங்கே அமைச்சர் சி.வி. சண்முகம் அ.தி.மு.க. வேட்பாளருக்காக ஸ்கெட்ச் போட்டு தீவிரமாக களத்தில் உள்ளார். அதற்கு ஈடுகொடுக்கும் பணியை திமுக வேகப்படுத்தியுள்ளது.