
தருமபுரம் ஆதீன குரு மகா சந்நிதானத்தின் ஞானரத யாத்திரையைத் துவக்கி வைக்க மயிலாடுதுறைக்கு வருகை தந்த தமிழக ஆளுநருக்கு திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கருப்புக்கொடி காட்டினர்.
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள புஷ்கர விழாவில் பங்கேற்க மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம் இன்று ஞானரத யாத்திரையாக செல்லவுள்ளார். இந்த விழாவை தொடங்கி வைப்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறைக்கு வருகை தந்தார். அவரது வருகைக்கு திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
தருமபுரம் ஆதீனத்திற்கு ஆளுநர் வருகை தந்தால் போராட்டம் நடத்துவோம் என நேற்றே அரசியல் கட்சிகள் தெரிவித்திருந்ததால் அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அதனையும் மீறி கருப்புக்கொடி காட்டப்பட்டதால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.