Published on 18/04/2018 | Edited on 18/04/2018
ஏப்ரல் 17 முதல் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தூத்துக்குடி மாவட்ட ஊர்களில் வாகன பரப்புரையை மேற் கொண்டார். இன்று அவர் கோவில்பட்டியில் ஆரம்பிக்கிற நிலையில் நகர பா.ஜ.க.வினர் மா.தலைவர் சிவந்திநாராயணன் தலைமையில் வைகோ பரப்புரையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மோடியை வைகோ தாக்கிப் பேசுகிறார். அதனால் நாங்கள் எதிர்க்கிறோம். இதில் 60 பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டார்கள்.
எனக்கு கருப்பு கொடி காட்டி பெயர் வாங்கிக் கொடுத்த பி.ஜே.பி.காரர்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். என் மூச்சு இருக்கும் வரை ஸ்டெர்லைட்டை எதிர்ப்பேன் இப்போது மக்கள் சக்தியும் மாணவர்கள் சக்தியும் இணைந்துள்ளது. என் வேலை எளிதாகி விட்டது என்று பேசினார் வைகோ.