Skip to main content

தமிழக பாஜக தலைவரை மாற்ற தயாரான பாஜக தலைமை!

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இருந்தாலும் தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் பாஜக படு தோல்வி அடைந்தது. இதனால் பாஜக தலைமை தமிழக பாஜக நிர்வாகிகள் மீது கடும் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் தோல்விக்கான காரணத்தை கேட்டு தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு சில உத்தரவுகளை பாஜக தலைமை போட்டதாக கூறுகின்றனர். அதன் அடிப்படையில் தமிழகத்தில் பாஜக நிரிவாகிகள் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர். 
 

bjp



இதனையடுத்து தமிழகத்தில் பாஜக தலைவர் மற்றும் சில முக்கிய நிர்வாகிகளை மாற்ற பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தமிழகத்தில் இருக்கும் சில பாஜக நிர்வாகிகள் தலைவர் பதவிக்காக டெல்லி தலைமையை அணுகி இருப்பதாக சொல்கின்றனர். ஆனால் பாஜக வட்டாரங்களில் இருந்து இது குறித்து எந்த தகவலும் அதிகாரபூர்வமாக வரவில்லை. மேலும் தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் பதவி காலம் முடிவடையும் நிலையில் இருப்பதால் அடுத்த தலைவருக்கு தமிழக பாஜக ரெடியாகி விட்டதாகவும் கூறுகின்றனர்.     

சார்ந்த செய்திகள்