சி.பி.ஐ, என்ஃபோர்ஸ்மெண்ட்,ஐ.டி டிபார்ட்மெண்ட் எல்லாம் கரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கொஞ்சம் ரிலாக்ஸாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் மத்திய அரசின் பழி வாங்கும் பட்டியலில் இருந்தவர்களைக் குறி வைத்து,அதிரடி ஆக்ஷனுக்கு ரெடியாக இருந்த, மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளான சி.பி.ஐ., அமலாக்கத் துறை,வருமான வரித்துறை ஆகியவை, கொரோனாவாலும் 21 நாள் முடக்கத்தாலும் தற்போது அமைதியாக இருப்பதாகச் சொல்கின்றனர்.இந்த அமைப்புகளால் குறிவைக்கப்பட்ட எதிர்க்கட்சிப் பிரபலங்களும்,அவர்களுக்கு ஆதரவான தொழிலதிபர்களும் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விடுவதாகக் கூறுகின்றனர். அதேபோல அரசு தொடர்பான வழக்குகளில் சிக்கியிருக்கும் எதிர்க்கட்சியினரும் கொரோனா புண்ணியத்தில் நிம்மதியாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
மேலும் மோடி அரசின் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஏப்ரல் 8ந் தேதி ஊரடங்கு 14 நாள் நிறைவடைகிறது.அதுதான் கொரோனா பாதிப்பைக் கண்டுபிடிப்பதற்கான கால அளவு என்கின்றனர்.மேலும் 10-ம் தேதிக்குள் இந்தியா முழுவதும் மாநில வாரியாக கொரோனா நோயாளிகள், அதன் பரவல் பற்றிய கணக்குகளை முழுமையாக எடுத்து,21 நாட்களுக்குப் பிறகும் ஊரடங்கை நாடு முழுவதும் நீடிப்பதா அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் செயல்படுத்துவதான்னு மோடி முடிவெடுக்க உள்ளதாகச் சொல்லப்படுகிறது.