Skip to main content

பாஜகவின் அடுத்த திட்டம்! அமித்ஷாவிற்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்!

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

பொது சிவில் சட்டம் கொண்டு வருவது, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு ராமர் கோவில் கட்டுறதுன்னு பல வேலைத்திட்டங்களை அமித்ஷாவுக்கு ஆர்.எஸ்.எஸ். கொடுத்திருக்கு. 2019 எம்.பி. தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கலைன்னா, மோடிக்குப் பதில் நிதின்கட்கரி பிரதமராக்கப்படலாம்னு யூகம் இருந்தது. ஆனா, தேர்தல் களத்தில் அமித்ஷா வகுத்த வியூகத்தால் எதிர்க்கட்சிகளால் பலமான கூட்டணி உருவாகாமல் தடுக்கப்பட்டது. அது, பா.ஜ.க.வுக்கு 303 எம்.பி.க்களோடு பிரதமரா மோடியை மீண்டும் உட்கார வச்சிடிச்சி. இதையும் கவனித்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். 
 

bjp



இப்பவே அடுத்த பிரதமருக்கான வியூகத்தை வகுக்க ஆரம்பிச்சிடிச்சி. மோடிக்குப் பதிலா ரேஸில் இருந்த நிதின் கட்கரி, உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் இவங்களையெல்லாம் ஓரங்கட்டிட்டு, அமித்ஷாவுக்கு அந்த சான்ஸை கொடுக்க இப்பவே ரெடியாக ஆரம்பிச்சிடிச்சாம். ஆ.எஸ்.எஸ்.சின் குட்புக்கில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலை இடத்தில்  இருக்கும் அமித்ஷா தான் மோடியின் பிரதமர் பதவிக்கு குறி வைக்கும் நபரா ஆர்.எஸ்.எஸ். தரப்பால் உருவாக்கப்படுகிறார். இதுதான் பா.ஜ.க. டெல்லி வட்டாரத்தில் ஹை லைட்டான டாக். பேட்டிகளில் கூட, மோடியின் வாய்ஸாக ஒலித்த அமித்ஷா, நேரடியா அதிகாரத் தலைமையில் இருந்து வாய்ஸ் கொடுக்கிற அளவுக்கு தன்னை ரெடி பண்ணிக்கிட்டிருக்காருனு சொல்லப்படுகிறது.

சார்ந்த செய்திகள்