கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன.இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,761லிருந்து 7,447 ஆக உயர்ந்துள்ளது. இதில் 239 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நாடு முழுவதும் சுமார் 643 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,574, தமிழகத்தில் 911, டெல்லியில் 903, ராஜஸ்தானில் 553, தெலங்கானாவில் 473, கேரளாவில் 364, ஆந்திராவில் 363, கர்நாடகாவில் 207 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கொரோனா கோர தாண்டவம் ஆடும் போது இந்தியாவில் தப்லீகி ஜமாத் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த சில ஆயிரம் பேருக்கு மட்டுமே பாதிப்பு .எனவே இந்தியாவை காப்பாற்றி வருவது அத்திவரதர் என்று ஆன்மீக வாதிகள் கூறுகின்றனர்.ஆனால் இதெல்லாம் ஈ.வெ.ரா கூட்டத்திற்கு புரியாது https://t.co/HqH9P9MMgg
— H Raja (@HRajaBJP) April 11, 2020
இந்த நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் பரவல் குறித்து கருத்து கூறியுள்ளார். அதில், "கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் இந்திய அளவில் 63% பேரும் தமிழகத்தில் 92%பேரும் தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் மதத்தைப் பற்றி பேசவேண்டாம். சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளாமல் ஓடி ஒளியும் கயமையைக் கண்டிக்கத் துணிவுண்டா, ஆங்கிலேய கிறித்தவ ஏகாதிபத்தியத்தின் அடிமைகளுக்கு ஏது துணிவு" என்றும், "அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கரோனா கோரத் தாண்டவம் ஆடும் போது இந்தியாவில் தப்லீக் ஜமாத் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த சில ஆயிரம் பேருக்கு மட்டுமே பாதிப்பு. எனவே இந்தியாவைக் காப்பாற்றி வருவது அத்திவரதர் என்று ஆன்மீக வாதிகள் கூறுகின்றனர். ஆனால் இதெல்லாம் ஈ.வெ.ரா கூட்டத்திற்குப் புரியாது என்றும் கூறியுள்ளார்.