கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,985- லிருந்து 19,984 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 603- லிருந்து 640 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,260-லிருந்து 3,870 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 5,218 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 722 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 251 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகத்துல 55 நாட்டுக்கு கோரோனாவுக்கு மாத்திரைகள் அனுப்பிச்சு அவங்க மோடி அவர்களை?கும்பிடறாங்க. இதுல நம்மள எவன் மிரட்றது⁉️21ஆம் தேதி இன்னிக்கு.17 ஏன் புலம்புது. நம்ம தேசத்துக்கு எதிரா பேசற சொறி நாய்கள் விரட்டி அடிக்கப்படும் நாள் வெகு விரைவில். எதுக்கும் ஒரு பிளட் டெஸ்ட் எடுத்துடு pic.twitter.com/gE7cpyIN5A
— S.VE.SHEKHER?? (@SVESHEKHER) April 21, 2020
இந்த நிலையில் நடிகரும், அரசியல்வாதியுமான பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி குறித்து விமர்சித்தவர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், "உலகத்துல 55 நாட்டுக்கு கரோனாவுக்கு மாத்திரைகள் அனுப்பிச்சு அவங்க மோடி அவர்களை கும்பிடறாங்க. இதுல நம்மள எவன் மிரட்டுறது! 21ஆம் தேதி இன்னிக்கு. 17 ஏன் புலம்புது. நம்ம தேசத்துக்கு எதிரா பேசற சொறி நாய்கள் விரட்டி அடிக்கப்படும் நாள் வெகு விரைவில். எதுக்கும் ஒரு பிளட் டெஸ்ட் எடுத்துடு என்றும், ஒருத்தன் திருட்டுத்தனம் பொறுக்கித்தனம் பண்ணினா திருட்டுப்பய பொறுக்கிப்பயன்னு சொல்லுவோம். அவனே இப்போ திருந்திட்டேன்னு சொன்னா நல்லா இருன்னு வாழ்த்துவோம். 200-க்கு கொலைக்கிற நாய்க்கு இதைப் புரிஞ்சுக்கும் மூளை கிடையாது. என்ன திரு முருகா வாங்கின காசுக்கு கூவிட்டியா" என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.