பாஜகவிற்கு இனி எதிர்காலம் இல்லை என பீஹார் முதல்வர் நிதிஸ்குமார் கூறியுள்ளார்.
ஹரியானாவில் முன்னால் துணை பிரதமர் தேவிலாலின் பிறந்த நாள் கூட்டம் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி பாஜகவிற்கு எதிராக அணிதிரள சூளுரைத்துள்ளனர்.
இந்திய தேசிய லோக்தளம் ஏற்பாடு செய்திருந்த தேவி லாலின் பிறந்த நாள் கூட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து 11 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய பீகார் முதல்வர் நிதிஸ் குமார், தனது மாநிலத்தில் 7 கட்சிகள் ஓரணியில் உள்ளது என்றும் இதனால் பாஜகவிற்கு இனி எதிர்காலம் பீகாரில் இல்லை என்றும் கூறினார். மேலும் இது போன்ற நிலை அனைத்து மாநிலங்களிலும் இருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் பேசிய அவர், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து 2024 தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் எனக்கூறினார்.
கூட்டத்தில் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு உறுதி அளித்த மோடி அதை நிறைவேற்றவில்லை என கூறினார்.