Skip to main content

பாஜக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள்... வெளியானது உத்தேச பட்டியல்!

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

BJP contesting constituencies, candidates ... Proposed list released!

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாரதிய ஜனதாவுக்கு  20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் நேற்று (05.03.2021) கையெழுத்தானது. முன்னதாக அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியுள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது. 

 

இந்நிலையில், பாஜக போட்டியிட விரும்பும்  தொகுதிகள்  மற்றும் வேட்பாளர்கள் குறித்த உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி ராசிபுரம் - எல்.முருகன், கிணத்துக்கடவு - அண்ணாமலை, கோவை தெற்கு - வானதி ஸ்ரீனிவாசன், சேப்பாக்கம் - குஷ்பு, நெல்லை - நாகேந்திரன், ராஜபாளையம் - கவுதமி, மயிலாப்பூர் - கே.டி.ராகவன், காரைக்குடி - ஹெச்.ராஜா, காஞ்சிபுரம் - கேசவன், திருத்தணி - சக்கரவர்த்தி, பழனி - கார்வேந்தன், சிதம்பரம் - ஏழுமலை, ஆத்தூர் - பிரேம்துரைசாமி, திருவண்ணாமலை - தணிகைவேல், வேலூர் - கார்த்தியாயினி, தூத்துக்குடி - சிவ முருக ஆதித்தன், துறைமுகம் - வினோஜ் பி.செல்வம் என்ற உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. வெளியான இந்தப் பட்டியல் அதிகாரப்பூர்வ பட்டியலில் இல்லை என்றும், இதில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.     

 

 

சார்ந்த செய்திகள்