Published on 11/06/2019 | Edited on 11/06/2019
முதல் அமைச்சராக பொறுப்பேற்ற நாளிலிருந்து ஜெகன் மோகன் ரெட்டி எடுக்கும் முடிவுகள் அரசியல் களத்தில் மிக ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.யாருமே எதிர் பார்க்காத நிலையில் 5 துணை முதல்வர்களை நியமனம் செய்து அனைவரின் கவனமும் ஈர்க்கும் வண்ணம் செயல்பட்டார்.பின்பு அமைச்சரவையில் பழங்குடி இன பெண்ணிற்க்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுகளை பெற்றார்.இந்த நிலையில் நேற்று நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில் சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார்.
அதாவது ஆந்திராவில் ரேஷன் பொருட்கள் அனைத்தும் பயன்படுத்துவோர் வீட்டுக்கே தேடி வரும் என்றும், மேலும் அரசு ஊழியர்களின் புதிய பென்ஷன் திட்டத்தையும் ரத்து செய்துள்ளார்.இந்த திட்டம் செப்டம்பர் 1 தேதி முதல் ஆந்திராவில் ரேஷன் பொருட்கள் பயன்படுத்தும் பயனாளிகளின் வீடு தேடி வரும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனை கிராம தன்னார்வலர்கள் மூலம் கொண்டு சேர்க்கும் ரேஷன் பொருட்கள் வீடுகளில் கொண்டு சேர்க்கப்படும். அந்த பொருட்கள் அனைவரும் பயன்படுத்தப்படும் வகையில் தரமானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த அறிவிப்பால் ஆந்திர மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.