Skip to main content

நேரில் வராத தினகரன்... அதிருப்தியில் இருக்கும் அமமுக நிர்வாகிகள்... களத்தில் இறங்க தயாரான தினகரன்! 

Published on 04/05/2020 | Edited on 04/05/2020

 

ammk



கரோனா நிவாரண உதவிகளில், எதிர்க்கட்சியான தி.மு.க. காட்டுகிற வேகத்தை, மற்ற கட்சிகளில் பார்க்க முடியவில்லை என்று சொல்கின்றனர். தி.மு.க.விலும் ஒரு சில மாவட்ட நிர்வாகிகள் சரியாக வேலை பார்க்கவில்லை என்று கூறிவருகின்றனர். அவர்களிடம் தொடர்பு கொண்டு நிவாரணப்பணிகளை மேற்கொள்ள ஸ்டாலின் அறிவுறுத்தியதாக சொல்கின்றனர். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியே உத்தரவிட்டும்கூட ஆளும்கட்சி அமைச்சர்களில் பெரும்பாலானோர், நமக்கென்னங்கிற மன நிலையிலேயே ஒதுங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் தைலாபுரத் தலைவர்களின் விசாரிப்பை கூட பார்க்க முடியவில்லை என்று பா.ம.க. நிர்வாகிகள், குறை கூறுகிற மாதிரியே, அ.ம.மு.க.வினரும் தினகரன் நேரில் வரவில்லை என்று வருத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. விழுப்புரம் பக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிலேயே முடங்கியிருக்கும் தினகரனை கட்சி நிர்வாகிகள் தொடர்புகொண்டு, நம் சார்பில் நிவாரண உதவிகளை செய்தாதானே மக்களுக்கு நம்பிக்கை வரும் என்று கூறியுள்ளனர்.


மேலும் அ.ம.மு.க. நிர்வாகிகள் எதிர்பார்ப்பை தினகரன் புரிந்து கொண்டாலும், புயல்-வெள்ளம் மாதிரியான பேரிடர் நேரத்தில் எவ்வளவு உதவிகள் வேண்டுமானால் செய்யலாம், ஆனால் இது தொற்று நோய் காலம் என்பதால் நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்களை முதலில் பாதுகாத்துக்கொண்டு, குடும்பத்தையும் பாதுகாத்து, முடிந்தளவு மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று தினகரன் கூறியதாக சொல்லப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்