தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன். இவர் 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை விமான நிலையத்திற்கு தனது கணவர் சௌந்திரராஜன் மற்றும் மகன் சுகநாதனுடன் வந்தார். திருச்சி செல்வதற்காக காலை 9.30 மணிக்கு வந்த தமிழிசை அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழிசை செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரது மகன் சுகநாதன், பிஜேபி ஒழிக... பிஜேபி ஒரு நாளும் தமிழகத்தில் ஜெயிக்காது, நோட்டாவுக்கு கீழேதான் ஓட்டு வாங்கும் என்று முழக்கமிட்டார்.
இதனால் தமிழிசையின் உதவியாளர்கள் அவரை விமான நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். அப்போது தமிழிசையிடம் அவரது உதவியாளர்கள் பேட்டியை உடனே முடித்துக்கொள்ளுங்கள் என்று கூறினர். இதையடுத்து தமிழிசை, தன்னுடைய மருமகளுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தனது மகன் மனஉளைச்சலில் இருக்கிறார். அதனால் இப்படி நடந்து கொள்கிறார் என்று கூறினார்.
பின்னர் அவர்கள் மூன்று பேரும் திருச்சி செல்லாமல், கார் மூலம் வீடு திரும்பினர்.