Published on 22/02/2021 | Edited on 22/02/2021

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சியின் துணைத்தலைவர் எஸ்.அன்பழகன் தலைமையில் அ.ம.மு.க. கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வருகிற 25/02/2021 அன்று காலை 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது. கரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி, தமிழகத்தின் 10 இடங்களைக் காணொளி வாயிலாக இணைத்து நடைபெறும் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட ஊர்களில், தங்களுக்கான அழைப்பிதழோடு வந்து கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.