Published on 22/07/2019 | Edited on 22/07/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் படுதோல்வி அடைந்தது. அதன் பின்பு, சசிகலாவை சந்திச்சி, தேர்தல் செலவு கணக்கை தினகரன் கொடுத்துள்ளார். அந்த கணக்குக் குறிப்பில் அவர், மயிலாடுதுறை அ.ம.மு.க. வேட்பாளர் செந்தமிழனுக்கு 17 "சி' கொடுத்தேன். அதில் அவர் முழுசா 10 ‘சி’யை விழுங்கிட்டார். தேர்தல் முடிஞ்சதும் அதில் அவர் பங்களா, காரெல்லாம் வாங்கியிருக்கார். இதேபோல் தஞ்சை வேட்பாளரும் தன் பங்கிற்கு விளையாடிட்டாரு. இப்படி பலரும் தேர்தலை வச்சி தேற்றிவிட்டார்கள்ன்னு புகார் சொல்லியிருக்காராம். இதனால் கடுப்பான சசிகலா, அப்படிப் பட்டவர்களிடம் கொடுத்ததை எல்லாம் வசூலிக்க குடவாசல் ராஜேந்திரன் மூலம் பஞ்சாயத்தும் நடந்து கொண்டுவருகிறது என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் தஞ்சைப் பகுதியில் இருந்து சசிகலாவுக்கு நெருக்கமான சிலர், ஜெ.’காலத்தில் அவர் பணத்தில், எங்க பேரில் ஏகப்பட்ட நிலத்தை வாங்கிப்போட்டீங்க. அந்த நிலத்தில் சில ஏக்கரைத் தேர்தல் செலவுக்குன்னு தினகரன் வித்து எடுத்துக்கிட்டார். எங்களால் தடுக்க முடியலை. என்ன இருந்தாலும் அது ஜெ.வின் சொத்துதானேன்னு புகார் கடிதம் எழுதியிருக்காங்களாம். இது சம்பந்தமா தினகரனிடமும் கேள்வி எழுப்பப்பட்டிருக்குதாம். இதனால் தினகரனுக்கு அக்கட்சி நிர்வாகிகளிடையே பனிப்போர் நிலவி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் சசிகலா குடும்பத்திலும் இந்த தேர்தல் கணக்கு பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது என்று கூறுகின்றனர்.