Published on 19/12/2024 | Edited on 19/12/2024
டாக்டர் அம்பேத்கர் பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசியதை கண்டித்தும், அதற்காக அவர் மன்னிப்பு கேட்டு பதவி விலக வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை முகாம் மற்றும் சென்னை மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் இன்று(19-12-2024) கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடல் அருகில் நூறடிச்சாலையில் கண்டன முழக்கங்கள் எழுப்பி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.