Skip to main content

என்னிடம் என்ன சொன்னீங்க...? அமித்ஷாவின் கேள்வியால் நடுங்கிய தமிழக பாஜக

Published on 31/05/2019 | Edited on 31/05/2019

தமிழகத்தில் பாஜ வேட்பாளர்கள் 5 பேரும் தோல்வி அடைந்தாலும், பாஜகவை வளர்க்க தமிழகத்தை சேர்ந்த யாராவது ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும். பின்னர் அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் அவரை மாநிலங்களவை எம்பியாக நியமிக்க வேண்டும் என்று தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். 


 

 

Amit-Shah


 

மேலும், தமிழகத்தில் பாஜவை சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்காவிட்டால் அதிமுகவில் யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க கூடாது என்றும் டெல்லி பாஜ தலைமையை வலியுறுத்தி வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 


அமித்ஷா பதிலுக்கு தமிழக பாஜக நிர்வாகிகளை பார்த்து, போட்டியிட்ட 5 தொகுதிகளில் கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் சாதி செல்வாக்காலும், ராமநாதபுரத்துல நயினார் நாகேந்திரன் பணபலத்தாலும் வெற்றி பெறுவார்கள் என்று என்னிடம் சொன்னீங்களே? என்ன ஆச்சு? அதுமாதிரி கன்னியாகுமரியில பொன்னார் ஏன் இவ்வளவு ஓட்டில் தோற்றார். அந்த டீடெய்லும் வேணும்.


பாஜக அடுத்த முறை தமிழ்நாட்டில் கால் பதிக்க இப்போதே தயாராகணும். பூத்வாரியா வாக்குப்பதிவு விவரம் வேணும் என கேட்டிருக்கிறார். அமித்ஷாவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத அவர்கள் அமைதியாக திரும்பினார்களாம்.

 

 

சார்ந்த செய்திகள்