வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் சூலூர்,ஓட்டப்பிடாரம்,அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அணைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் ஒரே மேடையில் 6 சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தது அப்பகுதி மக்களிடையே பெரிய ஆச்சரியத்தை உண்டாகியுள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில், தேர்தல் பணிகள், பிரச்சாரங்கள்இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமின்றி, சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில்,திருப்பரங்குன்றம் பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில், அந்த தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாகராஜ், உக்கிர பாண்டி, செல்லப்பாண்டியன், சேகர்,ஆறுமுகம், பூவநாதன் ஆகிய 6 சுயேட்சை வேட்பாளர்களும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக மேடையில் பேசி மக்களுக்கான வாக்குறுதிகளை கூறினார்கள்.கமல் பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் சுயேட்சை வேட்பாளர்கள் மொத்தமாக ஒரே இடத்தில் தோன்றியது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.