சென்னை ராயப்பேட்டையில் அம்மா பேரவை ஆலோசனை கூட்டம் இன்று நடைப்பெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பி.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ஜெ. பிறந்தநாளன்று நலத்திட்டங்களை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
முதல்வர் பதவியிலிருந்து விலகி ஒரு வருடம் ஆனதில் வருத்தம் உள்ளதா என்ற கேள்விக்கு, எதைக் கொண்டு வந்தோம் இழப்பதற்கு என பதிலளித்தார். மக்கள் கருத்து எங்களுக்கு எதிராக இல்லை. தமிழகத்திலிருந்து கிடைக்கும் வரி வருவாயில் உரிய பங்கை வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். தமிழக அரசின் சுகாதார திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என கூறினார்.
பயங்கரவாதிகளின் பயிற்சி மையமாக தமிழகம் மாறிவிட்டது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று கூறியிருந்தார். இதற்கு ஜமுக்காளத்தில் வடிக்கட்டிய பொய் என ஓ.பி.எஸ். பதிலளித்தார்.
படங்கள்: அசோக்குமார்