
அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
முன்னதாக இந்த செயற்குழு கூட்டம் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட பின் மீண்டும் தேதி மாற்றப்பட்டு ஏப்ரல் 16ல் (இன்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், பிற மாநிலச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என கட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள் அனைவருக்கும் அழைப்பு வழங்கப்பட்டு தற்போது ஏறத்தாழ அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு அதிமுக செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதிமுகவில் கொள்கை ரீதியான முடிவு மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம். 2024 நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் மட்டும் சட்டமன்றத் தேர்தலில் தீவிர களப்பணியாற்றி வெற்றி பெற வேண்டும். ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் அதிமுக மாநாட்டை நடத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20ல் மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநாடு நடைபெறும் என்பன போன்ற 15 தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.