


Published on 22/04/2019 | Edited on 22/04/2019
திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் மே 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனு பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நான்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.