சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் வியாழக் கிழமை சிவகங்கை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் சேவியர் தாஸ் கிராமங்கள் தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் தொகுதி பொறுப்பாளர்களும் வந்திருந்தனர். கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே திறந்த ஜீப்பில் நின்று வாக்கு கேட்டார்.
அதற்கு முன்னதாக பேசிய முன்னாள் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ பேசும் போது, இந்தத் தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்று உயர்ந்த பதவிகளில் இருந்தார். ஒன்னும் செய்யல, அவர் மகன் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார்; ஆளே வரல. இந்தப்பகுதியில் பூ அதிகம் விளையும் பகுதி ஒரு செண்ட் கூட கொண்டு வரல.
ஆனால் எங்கள் மாநில அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மருத்துவக்கல்லூரி, வேளாண்கல்லூரி, கொண்டு வந்தார். கால்நடைக்கல்லூரியும் கொண்டு வந்தார் என்று ஏகத்திற்கு பேசிக்கொண்டே இருக்க கால்நடை மருத்துவக்கல்லூரி நம்ம மாவட்டத்தில் எங்கே இருக்கு? சொன்னாலும் சரியா சொல்ல வேண்டாமா..? என்று ர.ர க்களே கேட்டனர்.
இதெல்லாம் சரி தான் நீங்க எம்பி யாக இருந்து இந்தப்பகுதிக்கு என்ன செஞ்சீங்கன்னு கடைசிவரை சொல்லவே இல்லையே, நீங்க வேட்பாளரா வந்தப்பவும் சென்ட் தொழிற்சாலை வேண்டும் என்ற கோரிக்கை வச்சாங்க தானே. செய்றேனு சொல்லிட்டு ஓட்டு வாங்கி ஜெயிச்சு போன பிறகு உங்களையும் ஆளையே காணுமே இப்ப தானே பார்க்கிறோம் என்ற முணுமுணுப்பு ர.ரக்கள் கூட்டத்திலும் எழுந்துள்ளதாம்.