Skip to main content

நீங்கள் ஏன் 'தப்லிக் இ ஜமாத்துக்கு' கடிதம் எழுதக் கூடாது ?...கமலை கடுமையாக விமர்சித்த காயத்ரி ரகுராம் !

Published on 07/04/2020 | Edited on 07/04/2020



கரோனாவுக்கு எதிரான போரில் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதைக் காண்பிக்கும் விதமாக விளக்கேற்றச் சொன்ன பிரதமர் மோடியை விமர்சித்து கமல் கடிதம் எழுதினார். அதில் 'எண்ணெய் இல்லை; விளக்கேற்ற முடியுமா?. உங்கள் தொலைநோக்குப் பார்வை தோற்றுவிட்டது.கடந்த இரு முறை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நீங்கள் இந்தக் கடினமான சூழலில் பிரச்னைகளைச் சந்திக்கும் மக்களைச் சமாதானபடுத்தும் முயற்சியில் இறங்கினீர்கள்.தலைமேல் கூரையே இல்லாதோரின் நிலை என்னவாவது? நம் சமூகத்தில் அதிகமாக இருக்கும் ஏழை மக்களைப் புறக்கணித்துவிட்டு பால்கனி மக்களுக்காக இயங்கும் அரசாக நீங்கள் உள்ளீர்கள் .' எனப் பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் கடிதம் எழுதினார்.மேலும் பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன், ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே,அவர் இன்றுதான் வருகிறார் என்று, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மோடியை விமர்சனம் செய்து இருந்தார். 
 

 

 

mnm



இந்த நிலையில் நடிகையும், பாஜக கட்சியைச் சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் நடிகர் கமலை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அதில் "நீங்கள் ஏன் சீன அதிபர் ஜின்பிங்குக்கும்,தப்லிக் இ ஜமாத்துக்கும் கடிதம் எழுதி அவர்களின் தோல்வியைச் சுட்டிக்காட்டக்கூடாது? அரசின் உத்தரவை மதிக்காத, கீழ்ப்படியாமல் இருக்கும் பொறுப்பற்ற குடிமக்களுக்கு கடிதம் எழுதுங்கள். தமிழக முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் தோல்வியடைந்தார்கள் எனக் கூறுகிறீர்களா? தமிழக எம்.எல்.ஏ., எம்.பி.,க்களுக்கு முதலில் கடிதம் எழுதி அவர்களிடம் முறையிடுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்