Skip to main content

நடிகை ரோஜாவுக்கு வந்த பதவியை தட்டி சென்ற எம்.எல்.ஏ!

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

நடந்து முடிந்த ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் கட்சி வெற்றிபெற்றது.ஆந்திராவில்  மொத்தமுள்ள 175 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 151 சட்டமன்ற தொகுதிகளில் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்ற நிலையில் 5 துணை முதல்வர்கள் பதவி கொடுத்து அனைத்து அரசியல் கட்சியினருக்கும் அதிர்ச்சியையும்,வியப்பையும் ஏற்படுத்தினார்.கடந்த வாரம் 24 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
 

roja



அதில் நடிகை ரோஜாவுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர் பார்த்த நிலையில் அவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கவில்லை. இதனால் பெரும் ஏமாற்றம் ரோஜா அடைந்ததாக சொல்லப்படுகிறது. இன்று சட்டசபை கூடியதும் சபாநாயகராக தம்னேனி சீதாராமன் தேர்வு செய்யப்பட்டார். இந்த சபாநாயகர் பதவி நடிகை ரோஜாவுக்கு கொடுக்கபடும் என்று இருந்த நிலையில் தம்னேனி சீதாராமன் பொறுப்பேற்றுக்கொண்டார்.மேலும் ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கார்ப்பரேஷன் தலைவராக ரோஜாவை நியமித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்