Published on 12/06/2019 | Edited on 12/06/2019

இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள்,எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் தேர்தலில் அதிமுகவிற்கு ஏற்பட்ட பின்னடைவு பற்றியும்,அதிமுக கட்சிக்கு ஒற்றை தலைமை தேவையா என்பது குறித்தும் முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.ஒற்றை தலைமை வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.அவருடைய இந்த கருத்துக்கு ஆதரவாக பேசியவர் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.ராமச்சந்திரன்.இந்த நிலையில் உடல்நலக் குறைவால் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும்,குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராமச்சந்திரன் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.மேலும் அதிமுகவில் பலரும் ஒற்றை தலைமை இல்லாததே தோல்விக்கு காரணம் என்று கூறிவருகின்றனர்.