Published on 19/02/2022 | Edited on 19/02/2022

சிவகாசி - திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்துவிட்டு, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், "ஜெயலலிதா ஆட்சியில்தான், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போதுதான், சிவகாசி நகராட்சியையும், திருத்தங்கல் நகராட்சியையும் இணைத்து சிவகாசியை மாநகராட்சியாக ஆக்கினோம். சிவகாசி மாநகராட்சியாக அதிமுக ஆட்சி காலத்தில்தான் ஆக்கப்பட்டது.
சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் நான் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை செய்து முடித்துள்ளேன். ஆகவே சிவகாசி மாநகராட்சி தேர்தலில் அதிமுக 38 இடங்களுக்கு மேலாக வெற்றிபெற்று மாநகராட்சியை கைப்பற்றும். மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகளை அதிமுக கைப்பற்றும். சிவகாசி மாநகராட்சியில் அதிமுக ஆட்சி அமைக்கும்" என்றார்.