Skip to main content

பதட்டத்தில் இருந்த அதிமுக அமைச்சர்கள்... எடப்பாடி பழனிசாமி சொன்ன டயட் மெனு... மறுப்பு தெரிவிக்கும் அமைச்சர்கள்!

Published on 25/06/2020 | Edited on 25/06/2020

 

admk

 

தி.மு.க எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் என்று பெரிய இடங்களே கரோனாவால் மரணத்தை தழுவிய நிலையில், மக்கள் மத்தியில் பதற்றம் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அமைச்சர்கள் வரை அந்தப் பதற்றமும் பயமும் அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர். அதனால் மந்திரிகளை தொடர்புகொண்டு தைரியமூட்டிய எடப்பாடி பழனிசாமி, வாரம் ஒருதடவை பரிசோதனை செய்யுங்கள், கவனமாக இருங்கள் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. அதேபோல் நான் சாப்பிடும் ஆரோக்கிய டயட்டையே நீங்களும் பின்பற்றுங்கள் என்று தன் மெனுவை அனுப்பி வைத்துள்ளார். இந்த சூழல்லதான் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும் தற்போது கரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கார். அவரைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் கரோனா தொற்று என்று தகவல் பரவியது.’’

"ஆனால், அமைச்சர் அன்பழகனுக்கு தொற்று இல்லை என்று அவரே சொன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் முதல்வர் கூறினார். மு.க.ஸ்டாலினோ அமைச்சரைத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஸ்டாலின் சொல்வதை முதல்வர் மறுக்கும் வகையில் பதில் கூறியிருந்தார். ஆனால், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அமைச்சர் அன்பழகனுக்கு கோவிட் பாசிட்டிவ் உறுதியாகியிருக்கிறதென்றும், அவர் சீக்கிரம் குணமடைய வேண்டுமென்றும் ட்விட்டரில் பதிவிட பரபரப்பாகியது. அதேபோல் சி.வி.சண்முகம் சைடிலிருந்தும் உடனடியாக மறுப்பு அறிக்கை வந்தது. பாதுகாப்பாக தன்னை தனிமைப்படுத்தியிருந்தவர் வழக்கமான பரிசோதனை செய்ததை திரித்து விட்டார்கள் என்று அவர் தரப்பில் கூறினார்கள்.”

 

சார்ந்த செய்திகள்